Tuesday 10 December 2013

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

திருப்பூர் (தெற்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இரண்டாண்டுப் பணிகள் குறித்த இந்த இணையத்தின் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் எளிமையானவர்களாகவும், ஊழலற்றவர்களாகவும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அது எப்படி சாத்தியம்? என்று சந்தேகக் கண்ணோடு கேள்வி எழுப்புபவர்களும் இல்லாமலில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் எப்படி இது எப்படி சாத்தியமாகிறது? என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனக்கென ஒரு அமைப்புச் சட்டத்தை பின்பற்றும் கட்சியாகும். தனது அமைப்புச் சட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதை மிகத் தெளிவான முறையில் வரையறுத்துள்ளது.
“கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன்களுக்காக உறுதியுடன் போராட வேண்டும். தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுடனும், மக்களுடனும் முடிந்த அளவு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கும் மக்களுக்கும் சட்டமன்ற வேலைகளைப்பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துவதுடன் அவர்களது ஆலோசனைகளையும், அறிவுரை களையும் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற வேண்டும்”
“சொந்த வாழ்க்கையில் உயர்தரமான தூய்மையும். நேர்மையும் படைத்தவர்களாக கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் விளங்க வேண்டும் அவர்கள் ஆடம்பரமில்லாத வாழ்க்கை நடத்துவதுடன் மக்களுடன் தொடர்பு கொள்ளும் போதும், பழகும்போதும் தன்னடக்கம் உள்ளவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும். கட்சியின் நலனுக்கு அவர்களின் சொந்த நலனை உட்பட்டதாக ஆக்க வேண்டும்.” ( கட்சியின் அமைப்புச் சட்டம், பிரிவு 20) 

மற்ற முதலாளித்துவ கட்சிகளைப் போல அல்லாமல், கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் செலவுகளை தனது சொந்த நிதியிலிருந்து செய்வதில்லை. மக்களிடமிருந்து திரட்டிய தேர்தல் நிதியிலிருந்தே அந்தச் செலவுகளை மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், சட்டமன்ற உறுப்பினர் பதவி, தனிப்பட்ட நபரின் சொத்தாக அல்லாமல், மக்கள் நலனுக்கான கருவியாக மாற்றப்படுகிறது. மேலும், கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் மாத வருமானத்தை, கட்சியிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சி நிர்ணயித்துள்ள தொகையைப் பெற்றே தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளோடு, சட்டமன்ற உறுப்பினர்களின் பணிகளை கட்சி அவ்வபோது பரிசீலிக்கிறது. இதன் காரணமாக சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை விவாதிப்பதுடன், மக்களை பாதிக்கும் திட்டங்கள் மீது உரிய தலையீடுகளைச் செய்தும், மக்கள் போராட்டங்களின் குரலை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் செயல்பட முடிகிறது. மேலும், தவறான போக்குகள் தென்பட்டாலும், அது தொடக்கத்திலேயே சரி செய்யப்படுவதாலும், அவ்வகையான போக்குகள் தொடர்ந்தால், அந்த உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்க தயங்காத அரசியல் உறுதிப்பாட்டின் காரணமாகவும் - கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுபினர்கள் - மக்களால் நேசிக்கப்படும், எளிமையான, ஊழலற்ற, திறன் வாய்ந்தவர்களாக செயல்பட முடிகிறது.

மேலும், ஊழலுக்கு மிக முக்கியமான மற்றொரு காரணமாக இருப்பது, கார்பரேட் நிறுவனங்களின் நிதியை நம்பியே, கட்சிகள் இயங்குவதாகும். இந்தியாவில் உள்ள கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான், பெரு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவதில்லை. அதன் காரணமாக - அவர்களின் நிர்பந்தங்களுக்கு பணியவேண்டிய அவசியமற்ற, சுதந்திரத்துடன் கம்யூனிஸ்டுகள் செயல்பட முடிகிறது.

இதனை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால், உங்களைப்போன்ற உழைப்பாளர்களும், சிறு வணிகர்களும், விவசாயிகளும், சிறு நிறுவன உரிமையாளர்களும் கொடுக்கிற ஆதரவுதான் இவற்றிகெல்லாம் உள்ளூக்கமாக அமைந்துள்ளது. பெரும் நிறுவனங்களின் நிதியை மறுக்கும் கம்பீரத்தையும், ஊழலுக்கு எதிரான சமரசமற்ற உறுதியையும் அதுதான் கொடுக்கிறது.

நன்றி!
தோழமையுடன்,
கே.காமராஜ்,
திருப்பூர் மாவட்ட செயலாளர், சிபிஐ(எம்).

(எம்.எல்.ஏ பணிகளின் இரண்டாண்டு தொகுப்பு இதழின் பகுதிகள் இப்பக்கத்தில் தொடர்ந்து வெளியாக உள்ளன. அதன் முன்னுரையே மேற்கண்ட கட்டுரை)

(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
  1. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

  2. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

  3. மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)

  4. திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

  5. பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...

  6. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1

  7. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

  8. அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...

  9. மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...

  10. தொகுதி நிதி ஒதுக்கீடு ...

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)