Wednesday 11 December 2013

திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

திருப்பூரின் கோரிக்கைகளை முன்வைத்து நமது சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி பேசுகிறோம். அவற்றில் சில...
 
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ பேசியது:
 
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட் டங்களில் சிறு, குறு தொழில்களான என் ஜினியரிங் சம்பந்தப்பட்ட, பனியன், பவர் லூம், கைத்தறி, கார்மெண்ட்ஸ் ஆகிய தொழில்கள் மின்வெட்டாலும், மத்திய அரசின் கொள்கைகளாலும் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சு, நூல் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையினாலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதனை ஈடுகட்டும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்சார உற்பத்தியை தொடங்கி ஓர ளவு பாதிப்பைக் குறைக்க டீசலுக்கு மானி யம் வழங்கிட வேண்டும்.

(கே.பாலகிருஷ்ணன் - நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 25.03.2013)

மின் உற்பத்தியில் கடந்த ஆண்டுகளை விட சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதும் உண்மையே. இருந்தாலும் நமது மாநில ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 4.61 சதவிகிதமாக குறைந்துள்ளதற்கு மின் வெட்டும் ஒரு முக்கியமான காரணம் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது கோடை பருவம் துவங்கி யுள்ளதால் பல மாவட்டங்களில் மின் வெட்டு பல மணி நேரம் அதிகரித்துள்ளது. விவசாயம், சிறு குறு தொழில்கள் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று உள்ள மின் வெட்டு 2014 மார்ச் வரை இந் நிலை நீடிக்கும் என நிதிநிலை அறிக்கை யில் சொல்லப்பட்டுள்ளது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை காரணமாக வரும் ஜூன் மாதத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படும். புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் வாயிலாக மின் வெட்டு இல்லாத நிலைமை ஏற்படுத்தப் படும்.

கே. பாலகிருஷ்ணன்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின்வெட்டை போக்கவேண்டும் என்று தான் நாங்கள் வற்புறுத்துகிறோம்.

(டில்லிபாபு எம்.எல்.ஏ பேசியது 25.03.2013)

டில்லிபாபு: கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து குழாய் மூலம் எரிவாயுவை பெங்களுருக்கு கொண்டு செல்கிறது. இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டில் 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தரும புரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாயிகளின் நிலங்களில் குழாய் பதிப்பதற்காக எடுத்து வரும் நடவடிக்கையால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டத்தில் ஒரு விவசாயிக்கு கெயில் நிறுவனம் இழப்பீடாக குறைந்தபட்சம் 56 ரூபாய் வழங்கியுள்ளது. இது அடிமாட்டு விலையை விட மிகவும் மோசமாக உள்ளது. குழாய் பதிக்கும் பணிக்காக நிலங் களில் இருந்த தென்னை, மா, பலா மரங்களும், மஞ்சள் போன்ற பயிர்களும் வெட்டி அழிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள்.எனவே, தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்கின் றன.

(அண்ணாதுரை எம்.எல்.- உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசியது  1.04.2013)

அண்ணாத்துரை:பருவமழை தவறி விட்ட நிலையில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் தமிழகம் முழு வதும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவ தற்கான ஆபத்து உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுத்து தேவையான இடங் களில் ஆழ்துளை கிணறுகள் உள் ளிட்டவைகள் அமைத்திட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி குடிநீர் பிரச் சனையைத் தீர்க்க மேட்டுப்பாளை யத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து புதிய நான்காவது குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும்.திருப்பூர் மேம் பாட்டுக் கழகம் மூலம் குடிநீர் விநி யோகம் நடைபெறும் பகுதிகளுக்கு அரசு ஏற்கனவே நிர்ணயித்த விலை யில் கூடுதல் குடிநீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

(தொழில்துறை மானியக் கோரிக்கையில் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ ஏப்ரல் 2.04.2013)

சென்னை யைத் தவிர இதர பகுதிகளில் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு உள்ள நிலை யில் அங்கெல்லாம் தொழிற்கூடங்கள் இயங்கவேண்டுமென்றால் ஜெனரேட்டர் கள் அவசியம் தேவை. 25 குதிரை சக்தி கீழே உள்ள தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தில் 50 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும். அதற்குமேல் குதிரைத் திறன் உள்ள தொழிற்சாலைகளுக்கு மின்கட்டணத்தில் 25 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும். இதுபோன்ற செயல் பாடுகளால் அவர்களுடைய தொழில் களை பாதுகாக்க முடியும்.தற்போது சிறு, குறு தொழில் முனை வோர் ஓரளவு சமாளித்துக்கொண்டிருக் கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் கடந்த 20, 30 ஆண்டுகளாக சேமித்து வைத் திருந்த பணம், நகை, கார், மனை போன்ற வற்றை விற்றுத்தான் தொழிலை நடத்தி வருகிறார்கள். எனவே அவர்களுக்கான மானியங்களை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களு டைய தொழில்களை பாதுகாக்க முடியும். இத்தொழிலை நம்பி பணிபுரிவோரின் வேலைவாய்ப்பையும் பாதுகாக்க முடியும்.

(லாசர்  எம்.எல்.- கூட்டுறவு மற்றும் உணவுத்துறை 3.04.2013)

லாசர்:திருப்பூர் மாவட்டம், திருப்பூரி லும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி, சங்கராபுரத்திலும், நடை பெற்ற மின்வாரிய கூட்டுறவு நாணயச் சங்கத்திற்கான தேர்த லில் சிஐடியு அமைப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டு பின்பு அவை களை நிரகாரித்து விட்டு ஆளுங் கட்சியினரின் வேட்பு மனுக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு அறிவிப்பு செய்துள்ளார்கள். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் சென்று தடைவிதிக்க கூறியுள்ளார்கள். நீதிமன்றமும் இந்த தேர்தலை இம்மாதம் 16-ந் தேதி வரை தள்ளி வைத்துள்ளது. இது போல் தமிழ் நாட்டில் பரவலான இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய விடாமல் ஆளுங்கட்சியினரால் தடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் மீது வீண்பழி சுமர்த்தவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. பத்து விழுக் காடு குறைபாடுகளை சரிசெய்யுங் கள்.

தொழில்துறை மானியக் கோரிக்கையில் பாலபாரதி எம்.எல்....

பாலபாரதி:சென்னைக்கு அருகில் உள்ள போர்டு,ஹூண்டாய்.நிசான், பிஎம்ட பிள்யூ போன்ற பன்னாட்டு கார் நிறுவனங் கள் நோக்கியா போன்ற வெளிநாட்டு நிறு வனங்களுக்கு 24மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவை ஒன்னரை லட்சம் பேருக்குத்தான் வேலை வழங்கியுள்ளன. எப்ப நினைத்தாலும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி விடுகிறார்கள். ஆனால் 50லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி யுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்ட தொழிற்சாலைகளுக்கு பலமணிநேர மின் வெட்டு நியாயமா? மின்வெட்டால் அந்த 50லட்சம் தொழிலாளர்களும் வேலையை இழந்துள்ளார்களே, வருமானத்தை இழந்துள் ளார்களே, இதுகுறித்து அரசு கவலைப்பட வேண்டாமா?

விசைத்தறி குறித்து அண்ணாதுரை எம்.எல்.ஏ பேசியது (ஏப்ரல் 22)...

அண்ணாதுரை: கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திரு வள்ளுர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை ஆகிய விசைத்தறி கூடுதலாக உள்ள மாவட்டங்களில் தொழில்நுட் பத்தை மேன்மைப்படுத்திட சிறப்பு மையங்களை உரிய காலத்தில் உரு வாக்கவேண்டும். தொழிலாளர்க ளுக்கு சமூகப்பாதுகாப்பை உறுதிப் படுத்தவேண்டும்.விசைத்தறி கூடங்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சார சலுகை வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக் கிறது. அத்துடன் நிலையான கட்டண மாக 1 கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.30 விதிக்கப்படுகிறது. 5 ஹெச்பி மோட் டார் பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதத் திற்கு ரூ.240மும் 10 ஹெச்பி மோட் டார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.480 மும் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது. இதற்கு விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில் நிலையான கட்டணத்தை 1கிலோ வாட்டிற்கு ரூ.120 ஆக உயர்த்தலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் கருத்துக்கேட்புக்கூட்டத்தில் அறி வித்துள்ளது. எனவே அரசு தலை யிட்டு விசைத்தறியாளர்களுக்கு மேற் கண்ட கட்டணம் உயராமல் இருக்க உரிய வழிசெய்யவேண்டும்.

(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
  1. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

  2. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

  3. மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)

  4. திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

  5. பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...

  6. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1

  7. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

  8. அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...

  9. மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...

  10. தொகுதி நிதி ஒதுக்கீடு ... 

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)