Wednesday 11 December 2013

மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...


நவம்பர் 7, அதிகாலை ... அலைபேசிகள் அலறின. விடியலுக்கு முன்பே நமது சட்டமன்ற உறுப்பினர் பூம்புகார் பகுதியில் மக்களை சந்தித்தார். நொய்யலாற்றிலும், சங்கிலிப்பள்ளம், ஜம்மனை பள்ளம் ஓடைகளிலும் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், திருப்பூர் (தெற்கு) தொகுதியின்  ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிப்பின் தீவிரம் தெரியவந்ததும்,  உடனடியாக காவல்துறை கண்காணிப்பாளரை சென்று சந்தித்ததுடன் மீட்புப் பணிகளின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நிவாரண பணிகளைத் துரிதப்படுத்தினார்.

சுமார் 77 கோடி அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அரசு கணக்கிட்டுக் கூறிய போதிலும் - வெள்ள பாதிப்புக்குள்ளான சாலைகளை சீரமைக்க ரூ. 97.20 லட்சம் மட்டுமே வரப்பெற்றன. வெள்ள நிவாரணத்தொகையாக உயிரிழந்தவர்களுக்கு ரூ.22 லட்சம், சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 ஆயிரம் என ரூ.2 கோடியும் வழங்கப்பட்டன. வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு நிதி கேட்டும், முதலமைச்சருக்கு, பேரிடர் மேலாண்மைப் பிரிவு அதிகாரிக்கும் விரிவான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திலும் எம்எல்ஏ பங்கேற்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று மீட்புப் பணிக்கு ஏற்பாடு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட மாற்று ஏற்பாடும், நிவாரணமும் கிடைக்க முன்முயற்சி மேற்கொண்டார். தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவும், அரசியல் பாகுபாடில்லாமல், மக்களுக்கு உதவிகள் கிடைக்கவும்  போராடினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் உதவிகள் பெற்று பெட்சீட், அடுப்புகள், பாத்திரங்கள், சமையல் பொருட்கள், பாய்கள் உள்ளிட்டு வழங்கப்பட்டன.

ஆற்றோர மக்களை பாதுகாத்தல் ...


ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்ற வேண்டுமென பத்திரிக்கைகள் எழுதிக் குவித்தன. ஏற்கனவே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்தது. இந்த நிலையில் சுகுமார் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரிய இடத்தில் வசிக்கும் மக்களுக்கு  பொதுப்பணித்துறை நோட்டீஸ் கொடுத்தது.  அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சனையை எடுத்துக் கூறியதுடன், மாவட்ட ஆட்சியரையும், அமைச்சருடன் சென்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் ‘வீடுகள் அகற்றப்படாது’ என்ற உத்தரவாதம் கொடுத்தார்.

(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
  1. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

  2. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

  3. மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)

  4. திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

  5. பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...

  6. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1

  7. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

  8. அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...

  9. மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...

  10. தொகுதி நிதி ஒதுக்கீடு ...

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)